வடமாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வடமாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
X

பைல் படம்

வடமாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி நாளை உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

ஆனால் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாவதற்கான சாத்திய கூறுகள் முன்கூட்டியே ஏற்பட்டதால் இன்று வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் தாழ்வு பகுதி உருவானது.

இதனால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் வட மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து

இந்த காற்றழுத்த தாழ்வுபகுதி வலுவடைந்து புயல் சின்னமாக மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பலத்த காற்றுடன் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தில் இது வலுப்பெறுவதால் அது எந்த திசை நோக்கி நகர்கிறது என்பதை வானிலை ஆய்வாளர்கள் கண்காணித்து வருகின்றன

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது:-

வடமேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த பகுதியால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் படிப்படியாக மழை குறைய தொடங்கும்.

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும்.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறினார்/

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!