அண்ணாநகர் திமுக எம்எல்ஏ உட்பட 5 பேர் விடுதலை..!

அண்ணாநகர் திமுக எம்எல்ஏ உட்பட 5 பேர் விடுதலை..!
X

கடந்த 2017ம் ஆண்டு ரேஷன் பொருட்கள் விலையை தமிழக அரசு உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து தமிழக அரசை கண்டித்து திமுகவினர் ரேஷன் கடை முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். அந்த போராட்டத்தில் திமுக எம்எல்ஏ உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், சென்னை அண்ணா நகர் திமுக எம்எல்ஏ மோகன் உட்பட 5 பேரை விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!