அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப்பேரவை சார்பில் மகளிர் தின விழா

மகளிர் தினவிழாவில் பரிசு வழங்கப்பட்டது.
அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப்பேரவையின் சென்னை மண்டல மகளிர் அணி சார்பில், சர்வதேச மகளிர் தின விழாம் சென்னை வடபழனியில் நடைபெற்றது. மக்கள் நலப் பேரவையின் நிறுவனர் - தேசியத் தலைவர் ஆ.ஹென்றி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மக்கள் நலப் பேரவையின் மாநிலச் செயலாளர் மொய்தீன் சிறப்புரையாற்றினார், தலைமை நிலையச் செயலாளர் கார்த்திக் வரவேற்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில், மக்கள் நலப் பேரவையின் மகளிர் அணி நிர்வாகிகள் சென்னை மண்டலதலைவி கலாவதி, தென்சென்னை மாவட்ட தலைவி தேவகி, வடசென்னை மாவட்ட தலைவி ஜெயலட்சுமி, மத்திய சென்னை மாவட்ட தலைவி சிவசங்கரி செங்கல்பட்டு மாவட்ட தலைவி சுசித்ரா, திருவள்ளூர் மாவட்ட தலைவி புவனேஸ்வரி, மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் மோகனசுந்தரி மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் 300 க்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் நினைவு பரிசு மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu