தமிழகத்தின் மேற்குமாவட்டத்தில் ஆர்எஸ் எஸ் நுழைய ஒரு போதும் அதை அனுமதிக்க மாட்டோம்

தமிழகத்தின் மேற்குமாவட்டத்தில் ஆர்எஸ் எஸ் நுழைய ஒரு போதும் அதை அனுமதிக்க மாட்டோம்
X

சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர்அல்போன்ஸ்

தமிழக மக்கள் பிரதமரிடம் முக்கியக் கேள்விகள் கேட்பதற்கும் அதற்கு பிரதமர் பதில் சொல்ல வேண்டிய கடமை உள்ளது

சென்னை அண்ணா சாலையில் உள்ள சிறுபான்மையினர் ஆணையத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் பிறந்த நாளை முன்னிட்டு, வழக்கறிஞர் முருகன் ராஜா ஏற்பாட்டில் மனிதநேய நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கரம் சைக்கிள் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினோம் தமிழக முதலமைச்சர் அறிவுறுத்திய படி ஏழை எளியவர்களுக்கு உதவிசெய்யும் முறையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது இதன்மூலம் கனிமொழி அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்துக் கொள்கிறேன். பாரதப் பிரதமரின் வருகை அரசியல் சாசன சட்டபடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரு பிரதமர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையில் இருக்கின்ற பிரதமரை ஒரு மாநிலத்திற்கு வரக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது.

எக்கு கோட்டையாக இருக்கின்ற தமிழகத்தினுடைய மேற்கு மாவட்டத்தில் ஆர் எஸ் எஸ் நுழைய நினைக்கிறது ஒரு போதும் அதை அனுமதிக்க மாட்டோம். பிரதமர் தமிழகத்திற்கு வரும் போது தமிழக மக்கள் சில முக்கியமான கேள்விகள் கேட்பதற்கும் அதற்கு பிரதமர் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறார் என்றார் பீட்டர்அல்போன்ஸ்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்