ஆவின் பால் பண்ணையில் குழந்தை தொழிலாளர்கள் வீடியோவால் பரபரப்பு

ஆவின் பால் பண்ணையில் குழந்தை தொழிலாளர்கள் வீடியோவால் பரபரப்பு
X

ஆவின் பால் பண்ணையில் குழந்தை தொழிலாளர்கள் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.

அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில். குழந்தை தொழிலாளர்கள் அமர்த்தப்பட்ட அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை அம்பத்தூரில் இயங்கி வரும் ஆவின் பால் பண்ணையில் ஹரிராம் என்கிற ஒப்பந்த பணி நிறுவனத்தின் சார்பாக 12 வகுப்பு படித்த சிறுவர், சிறுமிகளை, குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இரண்டு மாத காலமாக பணியாற்றிய குழந்தை தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படாததால் குழந்தை தொழிலாளர்கள் ஆவின் நுழைவு வாயில் நின்று காலை முதல் காத்திருந்து வருகின்றனர்.

மேலும் குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றக்கூடிய வீடியோ காட்சியானது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே இதுபோன்று குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story