கொரட்டூரில் சிலம்பம் மாணவர்களுக்கு வேல்கம்பு பயிற்சி

கொரட்டூரில் சிலம்பம் மாணவர்களுக்கு வேல்கம்பு பயிற்சி
X

பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. 

சென்னை அருகே கொரட்டூரில், சிலம்பம் மாணவர்களுக்கு வேல்கம்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் வன்னியர் தெரு திரௌபதி அம்மன் கோயில் வளாகத்தில் எம். எம் சிலம்பக்கலை கூடம் மற்றும் ஸ்கூல் ஆப் இந்தியன் சிலம்பம் அறக்கட்டளை சார்பில், சிலம்பம் வேல்கம்பு பயிற்சி முகாம், சிலம்பம் ஆசான் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

சிலம்பம் வேல்கம்பு சிறப்பு பயிற்சி முகாமில், வேல்கம்பு பயிற்சியாளர் பகவதி சந்திரசேகரன் கலந்து கொண்டு சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, சிலம்பம் வேல்கம்பு பயிற்சி அளித்தார். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக, சமூக ஆர்வலர்கள் தினேஷ்குமார், சந்திரசேகரன் , மகேஷ், ஸ்ரீதர், ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் வேல்கம்பு வழங்கி சிறப்புரையாற்றினர். இதில் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா