அம்பத்தூர் அருகே மனைவியை அடித்து கொலை செய்த உத்தரபிரதேச வாலிபர் கைது

அம்பத்தூர் அருகே மனைவியை அடித்து கொலை செய்த உத்தரபிரதேச வாலிபர் கைது
X
அம்பத்தூர் அருகே மனைவியை அடித்து கொலை செய்த உத்தரபிரதேச வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் ஆசிரியர் காலனி நேரு தெருவில் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஹாரிஸ் பிரம்மா (வயது26) என்பவர் வசித்து வருகிறார். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

பீகாரை சேர்ந்தவர் ரஷ்யா காத்தூன் (22). கடந்த 4 மாதம் காலமாக இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே இருவர் கணவன் மனைவி போல் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ரஷ்யா காத்தூன் நடத்தை மீது ஹாரிஸ் பிரம்மாவிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் ரஷ்யா காத்தூனை அடிக்கடி ஹாரிஸ் பிரம்மா அடித்து துன்புறுத்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதில் ரஷ்யா காத்தூன் முடியை பிடித்து ஹாரிஸ் பிரம்மா சுவற்றில் பலமாக மோதி அடித்து உள்ளார். இதில் தலையில் ரத்தம் சுட்டியபடி மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஹாரிஸ் பிரம்மா ரஷ்யா காத்தூனை மீட்டு அம்பத்தூரில் தனியார் மருத்துவமனையில் முதல் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே ரஷியா காத்தூன் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இது குறித்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் வீட்டின் உரிமையாளர் புகார் செய்தார். போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ஹாரிஸ் பிரம்மாவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story