54 வது பிறந்தாள் : அண்ணா -கருணாநிதி நினைவிடத்தில் எம்பி கனிமொழி மரியாதை
சென்னையிலுள்ள திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய மாநிலங்களவை திமுக எம்பி கனிமொழி
தனது 54 வது பிறந்த நாளைமுன்னிட்டு அண்ணா , கருணாநிதி நினைவிடத்தில் திமுக எம்பி கனிமொழி மரியாதை செலுத்தினார்.
திமுக மகளிரணி செயலாளரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தனது 54 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். கருணாநிதி நினைவிடத்தில் மாலையிட்டு மரியாதை செலுத்திய கனிமொழி, மலர் தூவி நினைவிடத்தை சுற்றி வலம் வந்தும் மரியாதை செலுத்தினார்.கருணாநிதி நினைவிடத்திற்கு வருகை தந்த கனிமொழிக்கு அவரது ஆதரவாளர்கள் பூங்கொத்து வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக் கூறினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி மேலும் கூறியதாவது: பெண்களுக்கான திருமண வயதை 21 ஆக அதிகரிக்கும் மசோதவிற்காக அமைக்கப்பட்ட ஆய்வு குழுவில் உள்ள 30 நபர்களில் ஒருவர் மட்டுமே பெண் என்பதால், இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது குறித்து ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu