தஞ்சாவூர் முன்னாள் அதிமுக எம்பி பரசுராமன் விரைவில் திமுகவில் இணைகிறார்

தஞ்சாவூர் முன்னாள் அதிமுக எம்பி பரசுராமன்  விரைவில் திமுகவில் இணைகிறார்
X

பைல் படம்

தஞ்சாவூர் முன்னாள் அதிமுக எம்பி பரசுராமன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவாளர்களுடன் கட்சியில் இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது

தஞ்சாவூர் முன்னாள் எம்பி பரசுராமன் அதிமுகவில் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலராக இருக்கிறார். கடந்த 2014ம் ஆண்டில் தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில், எம்பியாக வெற்றி பெற்றார்.

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ஆதரவாளராக இருந்தும், கடந்தமுறை எம்எல்ஏ சீட் கேட்டார்.ஆனால் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இதனால், அதிருப்தியில் இருந்த பரசுராமன் சில நாட்களுக்கு முன், முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசி வீடியோ வெளியிட்டார்.

திருவையாறு எம்.எல்.ஏ தெற்கு மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் ஆகியோரை சந்தித்து திமுகவில் இணைய விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

விரைவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தனது ஆதரவாளர்களுடன் கட்சியில் இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!