குழந்தை தலையில் சிக்கிய ஸ்டீல் பாத்திரம்: தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக அகற்றம்

குழந்தை தலையில் சிக்கிய ஸ்டீல் பாத்திரம்: தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக அகற்றம்
X

குழந்தையின் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்தை அகற்றும் தீயணைப்புத்துறையினர்.

அம்பத்தூர் பாடி பகுதியில் ஒன்றரை வயது குழந்தை தலையில் சிக்கிய ஸ்டீல் பாத்திரத்தை தீயணைப்பு துறையினர் பத்திரமாக அகற்றினர்.

சென்னை புறநகர் பகுதியான அம்பத்தூர் பாடி அருகே 3வது குறுக்கு தெரு பாடி பகுதியில் வசித்து வருபவர் வினோத்ராஜ் -அனிதா தம்பதியினர் இவர்களின் ஒன்றரை வயது குழந்தை யஷ்விதா.

குழந்தை யஷ்விதா வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக வீட்டில் வைத்திருந்த ஸ்டீல் பாத்திரம் தலையில் மாட்டிக்கொண்டது. இதனையடுத்து குழந்தை கூச்சலிட்டதால், இதனை கண்ட பெற்றோர்கள் என்ன செய்வது தெரியாமல் திகைத்து கொண்டிருந்தார்.

உடனடியாக அம்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறை அலுவலர் முத்து கிருஷ்ணன் மற்றும் முன்னணி நாகராஜ் விரைந்து வந்து குழந்தை தலையில் மாட்டிக்கொண்டிருந்த ஸ்டீல் பாத்திரத்தை குழந்தைக்கு தலையில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் ஸ்டீல் பாத்திரத்தை அகற்றினர். குழந்தையை மீட்டுத் தந்த தீயணைப்பு வீரர்களுக்கு தம்பதியினர் மற்றும் பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!