குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகத்தில் 5 நாள் சுற்றுப்பயணம்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகத்தில் 5 நாள் சுற்றுப்பயணம்
X

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் (பைல் படம்)

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 5 நாள் சுற்றுப்பயணமாக ஆகஸ்ட் 2 தேதி தமிழகம் வருகிறார். பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 5 நாள் சுற்றுப்பயணமாக ஆகஸ்ட் 2 தேதி மதியம் தமிழகம் வருகிறார். ராஜ்பவன் சென்று தங்கி இருந்து, மாலை 5 மணிக்கு செயின் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழக சட்டப் பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைக்கிறார்.

சென்னை மாகாணத்தின் சட்டமன்றம் உருவான 100 வது விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.

இதனையடுத்து, மறுநாள் காலை கோயம்புத்தூர் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி சென்று 4 மற்றும் 6 தேதி வரை ஊட்டியில் தங்கி ராணுவ நிகழ்ச்சியில் பங்கேற்கின்றார் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!