ட்விட்டர் பக்கம் முடக்கம்; டிஜிபியிடம் குஷ்பு புகார்

ட்விட்டர் பக்கம் முடக்கம்; டிஜிபியிடம் குஷ்பு புகார்
X

டிஜிபியிடம் புகாரளித்த பின் செய்தியாளரை சந்தித்த குஷ்பு.

தனது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து பாஜக பிரமுகரும் நடிகையுமான குஷ்பூ புகாரளித்தார்.

தனது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதாக சென்னையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து பாஜக பிரமுகரும் நடிகையுமான குஷ்பூ புகாரளித்தார்.

பினனர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எனது டுவிட்டர் கணக்கில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக சில மாற்றங்கள் இருந்தது. இதுகுறித்து டுவிட்டர் நிறுவனத்திற்கு எனது புகாரை அளித்தேன்.

ஆனால் எனது ஈமெயில் முகவரியை வைத்தும் டுவிட்டர் கணக்கில் உள்நுழைய முடியவில்லை. பிறகு தான் எனது ட்விட்டர் அக்கவுண்டில் யாரோ ஹேக் செய்து எனது ட்விட்டர் பக்கத்தில் உள்ள பெயரையே மாற்றி உள்ளார்கள். இதை வைத்து அரசியல் ரீதியாகவும் தவறாக பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காக டிஜிபியை சந்தித்து புகார் அளித்துள்ளேன் என அவர் தெரிவித்தார்.

மேலும், பிகசிஸ் பொருத்தவரை அதன் மூலமாக எந்த கணக்குகளை ஹேக் செய்ய முடியாது. ராகுல் காந்தியின் கணக்கை ஹேக் செய்வதினால் பாஜகவுக்கு எந்த நன்மையும் கிடையாது.

எட்டு பேரை ஆளுநர்கள் பட்டியலிட்டு இருந்தார்கள். அதில் ஒரு பெண் பெயர் கூட இடம்பெறவில்லை என்பதுதான் எனது கருத்தே தவிர, நான் கவர்னர் பதவிக்கு எதிர்பார்க்கவில்லை. எனக்கு இன்னும் அதற்கான வயசும் இல்லை.

தமிழகத்தில் பாஜக தலைவராக அண்ணாமலை அவர்கள் தேர்ந்தெடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் நல்ல மனிதர் எல்லோரிடமும் சகஜமாக பழகக்கூடியவர். நேர்மையானவர், அவர் இந்த பதவிக்கு பொருத்தமானவர் எனவும் குஷ்பு தெரிவித்தார்.

Tags

Next Story
Oppo Find X8 இணையத்தைக் கலக்கும் மொபைல் சீரிஸ்..! என்ன விலை? | oppo find x8 pro review in tamil