தீபாவளிக்கு பட்டாசு விற்பனை: அதிர்ச்சியில் ரேஷன் கடை ஊழியர்கள்
கூட்டுறவு சங்கங்கள் சார்பில், ரேஷன் கடைகள், பல்பொருள் அங்காடிகள், மருந்தகம் மற்றும் காய்கறி கடைகள் இயங்குகிறது. தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பது வழக்கம். கூட்டுறவு கடைகளில் குறைந்த விலையில் பட்டாசு நிலை மாறி சமீபகாலமாக வெளிச்சந்தையை விட, கூடுதல் விலைக்கு விற்கப்பட்டதால், மக்கள் வாங்க முன்வரவில்லை.
இதனால், காஞ்சிபுரம் மொத்த கூட்டுறவு பண்டகசாலை உட்பட பல சங்கங்களில், பட்டாசு விற்பனையை விட, அதற்கான கடை அமைத்தல், விளம்பரங்களுக்கு அதிக செலவு செய்யப்பட்டது.ரேஷன் கடைகளில் பட்டாசு விற்கக் கூடாது. ஆனால், ஒவ்வோர் ஆண்டும் தீயணைப்பு உள்ளிட்ட துறைகளிடம் அனுமதி பெறாமல் பட்டாசு விற்கப்படுகிறது.
அதன்படி, அடுத்த மாதம் 4-ஆம் தேதி தீபாவளி வருகிறது. இதனால், ரேஷன் கடைகளில் பட்டாசு விற்பனை செய்வதற்காக, ஒவ்வொரு கடைக்கும் எவ்வளவு ரூபாய் மதிப்புள்ள பட்டாசு தேவைப்படும் என்ற பட்டியலை, ஏரியா மேலாளர்கள் வாயிலாக, கூட்டுறவு சங்க அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.அதற்கு ஏற்ப, ரூ. 500 ரூ, 1,000 ரூ,2,000 ரூபாய் மதிப்புள்ள, 'கிப்ட் பாக்ஸ்' பட்டாசுகளை, ரேஷன் கடைகளில் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அவற்றை யாரும் வாங்கவில்லை எனில், ஊழியர்களே எடுத்து கொண்டு, அதற்கு உரிய பணத்தை செலுத்துமாறு, அதிகாரிகள் நிர்பந்தம் செய்வார்கள் என்பதால் ரேஷனில் விற்காத பட்டாசுக்கு தாங்களே பணம் செலுத்த வேண்டும் நிலை ஏற்படுமோ என்று அதிர்ச்சியில் ரேஷன் கடை ஊழியர்கள் இருக்கிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu