சென்னை விமான நிலையத்தில் இன்று முதல், 30 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை முடிவு
சென்னை விமான நிலையத்தில்30 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை முடிவு வெளியிடும் கருவி
சென்னை விமானநிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு,RT-PCR சோதனை முடிவு 30 நிமிடங்களில் அறிவிக்கும் அதநவீன கருவிகள் இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.
சென்னை விமான நிலையத்தில், பயணியருக்கு மேற்கொள்ளும் கொரோனா பரிசோதனை தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கடந்த வாரம் ஆய்வு செய்தார்.
அப்போது, லண்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் பயணியருக்கு மட்டும், உடல் வெப்ப பரிசோதனையுடன் RT-PCR பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கு ரூ.900 கட்டணமாக வசூலித்து,4 மணி நேரத்தில் முடிவு அறிவிக்கப்படுகிறது. இந்த பரிசோதனை முடிவுகளை, 13 நிமிடங்களில் அறிவிக்கும் நவீன சோதனை, சில நாட்களில் அமல்படுத்தப்பட உள்ளது என தெரிவித்தார்.
ஒருவரின் உடல் வெப்ப நிலையைக் கண்காணிக்கும் போது, திரையில் வெப்ப நிலை பச்சை நிறத்தில் இருந்தால், அவருக்கு பரிசோதனை தேவை இல்லை எனவும், சிவப்பு நிறத்தில் இருந்தால் அவருக்கு தொற்று பாதிப்பு உள்ளதாகக் கணக்கிடப்படும் எனவும் கூறினார்.
அதன்படி, ரேபிட் RT-PCR பரிசோதனை கருவிகள் சென்னை விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில நாடுகளிலிருந்து வரும் பயணியருக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை செய்ய இந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கருவிகளில் மேற்கொள்ளும் RT-PCR சோதனையின் முடிவுகள், 30 நிமிடங்களில் வழங்கப்படும். இந்த புதிய கருவியின் பயன்படுன்பாடு இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu