விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை தீயணைப்பு துறையினர் நடத்தி காட்டினர்.
அம்பத்தூர் பகுதியில் தீயணைப்பு துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
உலகம் முழுவதும் உள்ள இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் முதன்மையானது தீபாவளி. தீபாவளி பண்டிகையின்போது இனிப்பு கார வகைகள், புத்தாடைகளுக்கு அடுத்து சிறியவர் முதல் பெரியவர் அனைவராலும் வெடிக்கப்படுவது பட்டாசு. ஆதலால் தான் பட்டாசு இல்லாம் தீபாவளி இல்லை என கூறப்படுவது கூட உண்டு.
தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் தமிழ்நாடு தீயணைப்பு துறை சென்னை புறநகர மாவட்டம் அம்பத்தூர் தீயணைப்பு-மீட்புபணிகள் துறை நிலையத்தின் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அம்பத்தூர் ராமசாமி முதலியார் அரசு உதவி பெறும் பள்ளி வளாகத்தில் விபத்தில்லா தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழ்நாடு தீயணைப்பு மீட்புபணிகள்த்துறை இயக்குனர் ஆபாஸ்குமார் ஆணையின்படி, வட மண்டல இணை இயக்குனர் பிரியாரவிசந்திரன் அறிவுறுத்தலின்படி சென்னை புறநகர் மாவட்ட அலுவலர் தென்னரசு தலைமையில் நடைபெற்றது.
உதவி மாவட்ட அலுவலர் பொன்.மாரியப்பன், உதவி மாவட்ட அலுவலர் தலைமையகம் திருமுருகன் ஆகியோர் முன்னிலையில் சென்னை புறநகர் மாவட்டத்தை சேர்ந்த சென்னை புறநகர் நிலைய அலுவலர்கள், பணியாளர்கள் இணைந்து விபத்தில்லா தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டி செய்முறைகள் மூலம் விளக்கி பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். முடிவில் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இருசக்கர வாகனத்தில் அம்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் சென்று விபத்தில்லா தீபாவளி கொண்டாட வேண்டி குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu