அம்பத்தூர்: பாடியில் தூய்மை பணியாளர்களுக்கு திமுகவினர் மதிய உணவு!

அம்பத்தூர்: பாடியில் தூய்மை பணியாளர்களுக்கு திமுகவினர் மதிய உணவு!
X

தூய்மைப்பணியாளர்களுக்கு அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல் மதிய உணவு வழங்கியபோது.

சென்னை அம்பத்தூர் அருகே பாடியில் திமுக சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவுறுத்தலின் பேரில் அம்பத்தூர் அருகே பாடியில் தூய்மைப்பணியாளர்களுக்கு மதிய உணவு மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் கலந்துகொண்டு 300 தூய்மைப் பணியாளர்களுக்கு மதிய உணவு மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.

இதற்கான ஏற்பாடுகளை சென்னை கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் தெற்கு பகுதி 88வது வட்ட திமுக சார்பில் வட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட துணை அமைப்பாளர் ஆசை ஆரோக்கியம் ஆகியோர் செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் அம்பத்தூர் தெற்கு பகுதி செயலாளர் டி.எஸ்.பி. ராஜகோபால், எம்.டி.ஆர்.நாகராஜ், மோகன், மருத்துவர் சாந்தகுமாரி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!