6.53 கோடி பெண்கள் அரசு பஸ்களில் இலவச பயணம்; அமைச்சர் தகவல்

6.53 கோடி பெண்கள் அரசு பஸ்களில் இலவச பயணம்; அமைச்சர் தகவல்
X

பெண்கள் இலவச பஸ் பயணம்

தமிழகம் முழுவதும் 6.53 கோடி பெண்கள் அரசு பஸ்களில் இலவச பயணம் செய்துள்ளதாக, போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது

திமுக தேர்தல் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதி கொடுக்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் இதுவரை 6 கோடியே 53 லட்சம் பெண்கள் பயணித்துள்ளனர்.மேலும் திருநங்கைகள் மாற்றுத்திறனாளிகள் பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள்.

தினசரி 30 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள் 40% பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது 60 சதவீதம் பேர் பயணம் செய்கிறார்கள்.

இப்போதைக்கு பேருந்துகளில் கட்டணம் அதிகரிக்க வாய்ப்புகள் இல்லை.ரூ. 5 கட்டணம் நிறுத்தப்பட்டதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

வழக்கம்போல் ஐந்து ரூபாய் கட்டணம் மற்றும் பத்து ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசுலிக்கப்படவில்லை என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!