தமிழகத்தில் 34 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 100 கீழ் குறைந்தது

தமிழகத்தில்  34 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 100 கீழ் குறைந்தது
X

கொரோனா சிகிச்சை பைல் படம்

சுகாதாரத்துறையின் தீவிர கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டால் மாவட்டங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அரசின் தீவிர தடுப்பு நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தினசரி தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று 1,830 பேருக்கு புதிதாக தொற்று பரவியது. 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

38 மாவட்டங்களில் சென்னை, கோவை, ஈரோடு, சேலம் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு 100 தாண்டியது . 34 மாவட்டங்களில் பாதிப்பு 100 கீழாக குறைந்துள்ளது.

சுகாதாரத்துறையின் தீவிர கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டால் மாவட்டங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்தது

அதேபோல மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

சென்னையில் 130பேர் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 152 பேர் நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். உயிரிழப்பு எதுவும் இல்லை.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!