82% மக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டனர்: அமைச்சர் மா.சுப்ரமணியன்

82% மக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டனர்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
X

சென்னையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி அளித்தார்.

தமிழகத்தில் இதுவரை 82 சதவீத மக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுததிக் கொண்டனர் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

சட்டப் பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் அவர்கள் அறிவித்த அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதியோர் அறிவுத்திறன் மேம்பாடு மற்றும் தின பராமரிப்பு மையம் , ஆதரவற்ற மனநோயர் அவசர சிகிச்சை மற்றும் மீள் வாழ்வு மையம்

,இளைஞர்களுக்கான இணையதள சார்பு நிலை மீள் வாழ்வு மையம் , பிரசவத்திற்கு பிந்தைய மன அழுத்தத்திற்கான சிறப்பு ஆலோசனை மற்றும் பச்சிளங்குழந்தைகள் செவித்திறன் கண்டறிதல் ஆகியவற்றை அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியதாவது:

தமிழக முதல்வரின் சீரிய வழிகாட்டுதலின் படி அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் அனைத்தும் தொடர்ந்து நடைமுறைக்கு வந்து கொண்டுள்ளது. தற்போது இன்று ஐந்து சிகிச்சைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

தமிழகத்தில் முழு ஊரடங்கு வரக்கூடாது என்பது அனைவருடைய விருப்பம்..ஊரடங்கில் கடந்த இரண்டு ஆண்டு கடந்து விட்டோம்... இனி ஊரடங்கு வராமல் இருப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளது

ஒன்று கொரொனா விதிமுறைகளை முறையாக பயன்படுத்த வேண்டும் மற்றொன்று சமூக இடைவெளியை பயன்படுத்தி முககவசம் கட்டாயம் அணிதல் கைகளை நன்கு கழுவுதல் கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல் இரண்டாவது தவனை தடுப்பூசி அனைவரும் போட்டு கொள்ள வேண்டும் எனவும்... அடுத்த வாரம் 15வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் எனவும் தற்போது எழுபத்தி 6 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

51.35 சதவீதம் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த மக்கள் தகுதியாக உள்ளார்கள் என்றும் தமிழகத்தில் இதுவரை 82 % மக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளார்கள் எனவும் அவர் கூறினார்

அதேபோல்28 முதுகலை மருத்துவ படிப்பிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கை ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்க்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது எனவும் அவர் கூறினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!