கொடுங்கையூர் பகுதியில் 80 கிலோ குட்கா பறிமுதல் ஒருவர் கைது

கொடுங்கையூர் பகுதியில் 80 கிலோ குட்கா பறிமுதல் ஒருவர் கைது
X

சென்னை கொடுங்கையூர் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா 

கொடுங்கையூர் பகுதியில் 80 கிலோ குட்கா மற்றும் போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.

சென்னை கொடுங்கையூர், திருவள்ளுவர் சாலை, பகுதியில் ஒருவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசியம் தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கொடுங்கையூர் தனிப்படை உதவி ஆய்வாளர் கன்னியப்பன் தலைமையில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கொடு ங்கையூர் திருவள்ளூர் சாலை பகுதியில் பூமாரியப்பன் வயது 31 என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து பூ மாரியப்பனை கொடுங்கையூர் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 80 கிலோ குட்கா பொருட்களையும் போலீசார் பறி முதல் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!