புளியந்தோப்பு, பட்டாளம் பகுதியில் 7.10 கோடி ரூபாய் செலவில் திறந்த கால்வாய்

புளியந்தோப்பு, பட்டாளம் பகுதியில்  7.10 கோடி ரூபாய் செலவில் திறந்த கால்வாய்
X
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 
புளியந்தோப்பு, பட்டாளம் பகுதியில் ரூ 7.10 கோடி மதிப்பில் திறந்த வெளி கால்வாய் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

சென்னை எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் பெருந்திரள் தூய்மை பணியை எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் தொடங்கி வைத்தார். எழும்பூர் தொகுதியில் உள்ள அனைத்து இடங்களிலும் இன்று முதல் தூய்மை பணி மேற்கொள்ளப்படும் என கூறினார்.. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன்,

சென்னையில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக டிமலஸ் சாலை, ராஜா தோட்டம், பட்டாளம் போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனை சரி செய்யும் விதமாக 7.10 கோடி ரூபாய் செலவில் திறந்த கால்வாய் அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

எழும்பூர் தொகுதியில் மழைநீர் வடிவதற்கு புதிதாக நீர் ஏற்று நிலையம் அமைக்கப்படும். ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் மற்றும் மற்றும் கழிவுநீர் குழாய்கள் மாற்றியமைக்க அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

எழும்பூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் கடைகளில் சட்ட விரோதமாக பணம் பறித்தால் காவல்துறையில் புகார் அளிக்கலாம். கே.பி.பார்க் கட்டடம் தரமாக உள்ளது என்றும் மேல்பூச்சில்தான் குறைபாடு உள்ளது அரசாணை வெளியான பிறகு பயனாளிகளுக்கு வீடு வழங்கப்படும்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!