மும்பையில் இருந்து 5,3, 210 கோவீஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் சென்னைக்கு வந்தது

மும்பையில் இருந்து 5,3, 210 கோவீஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் சென்னைக்கு வந்தது
X

மும்பையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் 5லட்சத்து, 3 ஆயிரத்து,210 கொரோனா தடுப்பூசி மருந்துகள் வந்தன.

மும்பையில் இருந்து 5 லட்சத்து 3 ஆயிரத்து 210 கோவீஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் விமானம் மூலம் சென்னைக்கு வந்தது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவீஷீல்டு தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழகத்தில் பல பகுதிகளில் மக்களுக்கு போட தடுப்பூசிகள் இல்லாததால் தட்டுபாடு ஏற்ப்பட்டன. இதனால் தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது.

இந்நிலையில் மும்பையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 42 பார்சல்களில் சுமார் 5லட்சத்து 3 ஆயிரத்து 210 கோவீஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தன.

இதில் தமிழக அரசு கொள்முதல் செய்த 4 லட்சத்து 67 ஆயிரத்து 210 கோவீஷீல்ட் தடுப்பூசிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக்கொண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர்.

அதேபோல் மாநில தொகுப்பிலிருந்து வந்த மூன்று பார்சல்களில் 36 ஆயிரம் கோவீஷீல்ட் தடுப்பூசிகளை சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய மருந்து கிடங்கிற்க்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் இன்று மாலை புனேவில் இருந்து சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய மருந்து கிடங்கிற்க்கு இரண்டு பார்சல்களில் 24000 கோவீஷீல்ட் தடுப்பூசி சென்னைக்கு வந்துள்ளது..

Tags

Next Story
Weight Loss Tips In Tamil