தமிழகத்திற்கு மேலும் 3,14,110 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானத்தில் வந்தது

தமிழகத்திற்கு மேலும் 3,14,110 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானத்தில் வந்தது
X
புனேவில் இருந்து தமிழகத்திற்கு வந்த கொரோனா தடுப்பூசிகள்
தமிழகத்திற்கு மேலும் 3,14,110 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 864 கிலோ எடையில் 27 பாா்சல்களில் இன்று விமானத்தில் புனேவிலிருந்து சென்னை வந்தடைந்தன.

தமிழகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டிவருகிறது.

இதையடுத்து தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவா்கள் அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

பொதுமக்களும் ஆா்வமுடன் வந்து தடுப்பூசிகளை போட்டுக்கொள்கின்றனா்.இதனால் தமிழகத்திற்கு அதிக அளவில் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.

எனவே தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசிடம் கூடுதல் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு அனுப்பி வைக்கும்படி தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்த மேலும் தடுப்பூசிகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

புனேவிலிருந்து இன்று மாலை 5.20 மணிக்கு சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் 3,14,110 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 864 கிலோ எடையில் 27 பாா்சல்களில் சென்னை பழைய விமானநிலையம் வந்தடைந்தன. சென்னை

விமானநிலைய லோடா்கள் அந்த தடுப்பூசிகள் அடங்கிய பாா்சல்களை விமானத்திலிருந்து கீழே இறக்கினா்.அதன்பின்பு தடுப்பூசி பாா்சல்களை தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் சென்னை விமானநிலைய அதிகாரிகள் ஒப்படைத்தனா்.

அவா்கள் குளிா்சாதன வாகனத்தில் ஏற்றி,சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனா்.அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தேவைகளுக்கு ஏற்ப பிரித்து வழங்கப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதே இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் மேலும் 44 பாா்சல்களில் 1,401 கிலோ எடையில் 5,28,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளும் புனேவிலிருந்து சென்னை வந்தன.தமிழகத்தில் உள்ள சில தனியாா் மருத்துவமனைகளுக்கும்,சென்னை பெரிய மேட்டில் உள்ள ஒன்றிய அரசின் மருந்து சேமிப்பு கிடங்கிற்கும் இந்த 5,28,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளதாக சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

Tags

Next Story
ஆயுள் முழுக்க இதய நோய் வராம இருக்க இந்த வகை வாழைப்பழம் ஒன்னு போதும் ..! எப்படி சாப்பிடணும் ?