/* */

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து 3 நாட்கள் தொடர் போராட்டம் நடக்கும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து 3 நாட்கள் தொடர் போராட்டம் நடக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து 3 நாட்கள் தொடர் போராட்டம் நடக்கும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்
X

முன்னாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன். (பைல் படம்)

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தொடர்ந்து மூன்று நாட்கள் போராட்டங்கள் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் எதிரே பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்யின் முன்னாள் மாநில செயலாளர்ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகுத்தார்.. பின் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ஜி.ராமகிருஷ்ணன் ,

தமிழகத்தில் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது.தற்போது பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து இருக்கும் நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று பாஜக அரசை கண்டிக்கும் வகையில் போராட்டமானது நடைபெற்று வருகிறது.. மேலும் அடுத்த 3 நாட்களுக்கு தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்றும் கூறினார்.

கொரோனா காலகட்டத்தால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் இந்த நேரத்தில் விலை ஏற்றத்தை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம் என்று கூறினார்..

மேலும் கொரோனா மூன்றாவது அலைக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அதற்கான தடுப்பூசிகளை வழங்கும் வேண்டும்..செங்கல்பட்டில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் நிறுவனத்தில் தமிழக அரசு தடுப்பூசியின் உற்பத்தி செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கூறினார்..

பெட்ரோல் டீசல் விலையை குறைந்தால் திட்டங்களுக்கு நிதி இருக்காது என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் பொய் கூறியுள்ளார் என்றும் ,மேலும் தனியார் நிறுவனங்களுக்கு வரி சலுகை 1.45 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசால் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்..

கொரோனா கால நிவாரண நிதியாக ரூபாய் 7000 அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும் கூறினார்..

மேலும் தொடர் காலத்தில் கள்ள சந்தையில் மருந்து விற்பனையில் தடுத்து நிறுத்தி அனைத்து மக்களுக்கும் மருந்துகள் எளிமையாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும்

திமுக அரசின் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசு வரி விதிப்பின் விகிதத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார் நாங்களும் அதை வலியுறுத்துவோம் என கூறினார்.

Updated On: 28 Jun 2021 8:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?