சென்னையில் 18 விமானங்கள் ரத்து

சென்னையில் 18 விமானங்கள் ரத்து
X

தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது.

குறிப்பாக, சென்னையில் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. பயணிகள் வருகை குறைந்ததால் சென்னையில் இருந்து நேற்று மும்பை செல்ல வேண்டிய 3 விமானங்கள், ஐதராபாத் செல்ல வேண்டிய 3 விமானங்கள், பெங்களூரு, மதுரை, பாட்னா செல்ல வேண்டிய தலா 1 விமானங்கள் என 9 விமானங்கள் மற்றும் சென்னைக்கு வரவேண்டிய 9 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா