பல்லாவரம்: செல்போன் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

பல்லாவரம்: செல்போன் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
X
பல்லாவரம் அருகே செல்போன் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஸ்வரன் நகர் 2வது தெருவில் தங்கி, கட்டிட வேலை செய்து வருபவர், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சபீர்அலி (20). இவர், செல்போனை தலையின் அருகே வைத்து விட்டு தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர், சபீர் அலியின் செல்போனை திருடிக் கொண்டு தப்பிச் சென்றனர். சத்தம் கேட்டு கண் விழித்த சபீர்அலி, சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு வந்த நண்பர்கள் தப்பிச் செல்ல முயன்ற திருடர்களில் ஒருவனை துரத்தி மடக்கிப் பிடித்து, சங்கர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசாரின் விசாரணையில், பல்லாவரம் அடுத்த மலைமேடு பகுதியைச் சேர்ந்த பூவரசம்(22) என்பதும், தப்பிச் சென்ற இன்னொருவர், பல்லாவரம், ஈஸ்வரி நகரை சேர்ந்த உசேன் (22) என்பதும் தெரிய வந்தது. இவர்கள் பல்லாவரம் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடி அந்த வாகனத்தில் சென்று செல்போன் கொள்ளையில் ஈடுப்பட்டது தெரியவந்தது. பல்லாவரம் இந்திராகாந்தி நகர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த உசேனை, போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து, ஒரு இருசக்கர வாகனம் மற்றும் சபீர்அலியிடம் திருடிய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!..டிங்கா டிங்கானு ஒரு நோயாமா..பேரு தாங்க அப்டி,ஆனா பயங்கரமான நோய்!..