நண்பனை கொலை செய்ய முயற்சித்து தப்பிய ஓடிய நபர்களை தேடும் போலீசார்

நண்பனை கொலை செய்ய முயற்சித்து தப்பிய ஓடிய நபர்களை தேடும் போலீசார்
X

தீபக்.

நண்பனை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிய 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பஜனை கோவில் தெருவில் வசித்து வருபவர் தீபக் (வயது25). இவருடைய மனைவி ஜனனி(வயது21). இவர்களுக்கு 3வயதில், ஒரு மகனும் 2வயதில் மகளும் உள்ளனர். தீபக் திருநீர்மலை பகுதியில் பிரியாணி கடை வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் இன்று காலை சுமார் 5 மணி அளவில் அதே பகுதியில் உள்ள திருநீர்மலை கோவில் மலைமீது இருந்து ஒரு நபர் அலறல் சத்தத்துடன் வருவதை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பார்த்துள்ளனர். அருகில் சென்று பார்த்தபோது அந்த நபருக்கு கழுத்துப்பகுதியில் வெட்டுபட்டு ரத்தவெள்ளத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கழுத்துப்பகுதியில் 27 தையல்கள் போடப்பட்டது. கழுத்துப்பகுதியில் இருந்து அதிக அளவில் ரத்தம் வெளியேறியதால் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த சம்பவம் குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்துக்கு தெரிந்தவுடன் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை செய்த போது திருநீர்மலை பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் இன்று (9.08.21) 11 மணி அளவில் வீட்டிலிருந்த தீபக்கை அழைத்துச் சென்று இருவரும் திருநீர்மலை மலையின் மீது மது அருந்தியதாகவும், அப்போது நந்தகுமாரின் நண்பர்கள் 3 பேரை வரவழைத்து தீபக்கை கொலை செய்ய திட்டம் தீட்டி கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!