நடிகர் எஸ்.வி.சேகர் மூலம் இந்து வாக்குகளை பிரிக்க முயற்சி !
பைல் படம்
பிராமணர்களுக்கு என்று ஒரு தனி கட்சி தொடங்க உள்ளதாக எஸ்வி. சேகர் கூறியதாக ஒரு தகவல் கசிந்து உள்ளது இது உண்மையா. இது பிராமணர் ஓட்டு பாஜகவுக்கு விழாமல் தடுக்கும் சூழ்ச்சியா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எஸ்வி. சேகர் அதிமுக வில் இருந்த போது, ஒரு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து உள்ளார். பின்னர் அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் பாஜகவில் உறுப்பினர் ஆனார். அண்ணாமலை பாஜக மாநில தலைவர் பதவி பொறுப்பு ஏற்ற பின் பாஜக தமிழகத்தில் அசுர வளர்ச்சி பெற்று வருகிறது என்பதை திமுக மூத்த தலைவர்கள் கூட ஒத்துக் கொண்டு உள்ளனர்.
அண்ணாமலையை எப்படி கட்டுப் படுத்துவது என்று திராவிட கட்சிகள திசை தெரியாது திணறி வருகின்றனர். சிலர் அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்க கோரி டெல்லிக்கு படை எடுப்பு கூட நடத்தினார்கள். ஒன்றும் நடக்கவில்லை. இப்போது பாஜக ஓட்டு வங்கியை எப்படி பிரிப்பது என்று திட்டம் வகுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அண்ணாமல எங்கே பிராமண சமுதாய ஆதரவை பெற்றுவிட போகிறாறோ என்ற அச்சத்தில் சினிமா நடிகர்.எஸ்.வி.சேகர் மூலமாக பிராமண கட்சி துவக்க வைத்து பாராளுமன்ற தேர்தலில் தனியாக அனைத்து தொகுதியிலும் நிற்க நிதி உதவி அளித்து பாஜகவுக்கு போக வேண்டிய வாக்குகளை பிரிக்க திமுக திட்டம் இட்டு உள்ளதாகவும் ஒரு செய்தி உலா வருகிறது.
அதில் ஒரு பகுதியாக, கடந்த காலத்தில் பிராமணர்களுக்கு எதிராக தாலி அறுப்பு, பூணூல் அறுப்பு, பன்றிக்கு பூணூல் அணிவது என்று மிக கேவலமாக அந்த சமூகத்துக்கு எதிராக நடந்து கொண்ட தி க கட்சியின் தலைவர் வீரமணி எஸ்வி. சேகரை அழைத்து பேசி உள்ளார். அந்த சந்திப்பின் புகைப்படம் கூட வெளிவந்து உள்ளது. தம்பி, எங்களது இயக்கம் பிராமண துவேசம் செய்தது உண்மை தான். இனி அப்படி நடக்காது. இப்போது பாஜக பெரியாரின் திராவிட மண்ணில் அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. அதை தடுக்க வேண்டும். அதற்கு நீ பிராமணர் கட்சி ஒன்று ஆரம்பித்து ஓட்டை பிரிக்க வேண்டும். அதற்கு எல்லா விதமான உதவியும் திராவிட இயக்கம் செய்யும் என்று கூறி உள்ளாராம்.
இந்த சூழலில் நடிகர் எஸ்வி. சேகர், காயத்திரி ரகுராம் போன்ற பாஜக அதிருப்தி சக்திகளை ஒன்று திரட்டி பிராமணர் கட்சி ஒன்று ஆரம்பிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளாராம். அதன் தொடக்கமாக, அண்ணாமலை பிராமண சமூகத்துக்கு எதிரானவர் என்று பரப்புரை செய்யவும் எஸ்வி. சேகர் ஆரம்பித்து விட்டார்.
இந்து விரோத திமுக, கடந்த காலத்தில் பிராமணர்களுக்கு எதிராக நடந்து கொண்டது மட்டும் அல்ல. அவர்களுக்கு எந்த சலுகையும் கொடுக்க கூடாது என்பதில் பிடிவாதமாக உள்ளனர். தமிழகத்தில் பிராமணர் உள்ளிட்ட 80 க்கும் மேற்பட்ட உயர் ஜாதி பிரிவுகள் உள்ளன. அந்த ஜாதி மக்களில் ஏழைகளும் உள்ளனர். ஏழ்மை என்பது, சாதி பார்த்து வருவது இல்லை. தலித் இனத்தில் மட்டும் ஏழைகள் இல்லை. எல்லா சமூகத்திலும் இருக்கிறார்கள். மக்களில் இரண்டே பிரிவு. ஒன்று வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவன். இரண்டு வறுமை கட்டுக்கு மேல் உள்ளவன். ஏழை எந்த பிரிவில் இருந்தாலும் கை கொடுத்து தூக்கி விடப்பட வேண்டும். அதுதான் சமூக நீதி தத்துவம்.
இந்த சமூக நீதி தத்துவ அடிப்படையில், மோடிஜி இரண்டாம் முறை பிரதமராக 2019 ல் பதவி ஏற்ற உடனேயே பொருளாதார ரீதியாக பின்தங்கிய முற்பட்ட வகுப்புக்கான பத்து சதவீத ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்து மத்திய அரசின் கல்வி வேலை வாய்ப்புக்களில் நடைமுறைப்படுத்தி விட்டார். மற்ற மாநில அரசுகள் அந்த சட்டத்தை அந்த அந்த மாநில கல்வி வேலை வாய்ப்புகளில் நடைமுறைப்படுத்த சட்டமன்ற ஒப்புதல் அளித்து விட்டார்கள். அண்டை மாநிலங்களான கேரளா ஆந்திரா தெலுங்கானா கர்நாடகவில் சட்டம் ஒப்புக்கொள்ளப் பட்டுவிட்டது.
தமிழகத்தை பொறுத்த வரை, சாதி, சாதி என்று பிதற்றிக் கொண்டு, பார்ப்பனர் பாட்டு பாடி அரசியல் நடத்தும் காட்சிகள் இந்த இட ஒதுக்கீடு சட்டத்தை மாநிலத்தில் அமல் படுத்த உடன்படவில்லை. திமுக மற்றும் விசிக இந்த சட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் சென்றார்கள். மோடிஜி அரசு உச்ச நீதிமன்றம் வரை மேல்முறையீடு வாதிட்டு, சட்டம் செல்லுபடியாகும் என ஆணை பெற்று விட்டது. உச்ச நீதி மன்ற அரசியல் அமைப்பு இருக்கை இந்த இட ஒதுக்கீடு சட்டம் சமூக நீதி அடிப்படையில் செல்லும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது.
திமுக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்று இரண்டு ஆண்டுகள் ஆகியும் இந்த பத்து சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை செயல் படுத்த மறுத்து வருகிறது. அப்படியிருக்க பிராமணர் உள்ளிட்ட உயர் சாதி மக்கள் திமுகவுக்கு எப்படி ஓட்டு போடுவார்கள்? எனவே பொருளாதார ரீதியாக பின்தங்கிய முற்பட்ட வகுப்புக்கான பத்து சதவீத இட ஒதுக்கீடு கொடுத்த மோடிஜிக்கு நன்றி கடனாக தமிழகத்தில் உள்ள முற்பட்ட வகுப்பினை சேர்ந்த என்பதுக்கும் மேற்பட்ட ஜாதிகளில் உள்ளவர்கள் அடுத்த பாராளுமன்ற தேர்தல்ல பாஜக தலைமையிலான அணியைத்தான் ஆதரிப்பார்கள். என்பது திண்ணம். எஸ்வி. சேகர் மூலம் இந்து சமூகத்தை பிரித்து ஆள நினைக்கும் அஸ்திரம் விழலுக்கு இறைத்த நீராகத்தான் போகும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu