ஈரோட்டில் கால்வாயில் குளித்த மாணவர்களை அரை நிர்வாணமாக்கி உதைத்த கொடூரம்
பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின மாவட்ட செயலாளர் பழனிசாமி ஆறுதல் கூறினார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா காஞ்சிக்கோயில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்ணவேலம்பாளையம் என்ற பகுதியில் வழக்கமாக வாய்க்காலில் தலித் சமூக மாணவர்கள் மதிவாணன், தேவேந்திரன், நவநீதன், கௌதம், மோகன், சச்சின் மற்றும் சேவாக் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது மற்றொரு சமூகத்தை சேர்ந்த முள்ளம்பட்டி, ஓலப்பாளையம் ராமசாமி மகன் பிரகாஷ் என்பவர், உங்களுக்கு எல்லாம் இங்க என்னடா குளியல் கேட்குது என்று சொல்லி வாய்க்காலில் இருந்து அவர்களை வெளியேற்றி இருக்கிறார். மேலும் அந்த மாணவர்களை அரை நிர்வாணமாக ஜட்டியுடன் நிற்க வைத்து டிராக்டரில் கட்டி வைத்திருந்த கயிற்றை எடுத்து பலமாக அடித்து ஒரு மணிநேரம் பொதுவெளியில் ஜட்டியுடன் நிற்க வைத்து அவமானப்படுத்தி சித்திரவதை செய்துள்ளார்.பாதிக்கப்பட்ட மாணவர்கள் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின மாவட்ட செயலாளர் பழனிசாமி, துணை செயலாளர் என்.பாலசுப்பிரமணி, அனைத்திந்திய ஐனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவர் லலிதா, இந்திய ஐனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் விஸ்வநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெருந்துறை தாலுகா செயலாளர் முத்து பழனிசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி பெருந்துறை தாலுகா தலைவர் சுந்தரவடிவேலு, செயலாளர் கே ரவி மற்றும் பிரபு ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் விவரங்களை கேட்டறிந்து ஆறுதல் தெரிவித்தனர். இது போன்ற சம்பவங்கள் தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu