அனுமதி இன்றி மணல் கடத்திச் சென்ற 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்

அனுமதி இன்றி மணல் கடத்திச் சென்ற 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட மாட்டு வண்டிகள்.

ஜெயங்கொண்டம் அருகே கார்குடி கிராமத்தில் அரசு அனுமதி இன்றி கொள்ளிடம் ஆற்று மணல் ஏற்றி 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்.

கொள்ளிடம் ஆற்று பகுதியில் மாட்டு வண்டிகளில் மணல் திருடி செல்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கார்குடி கிராம நிர்வாக அலுவலர் தனது உதவியாளருடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பகுதியில் வந்த மாட்டு வண்டிகளை மறித்து சோதனை செய்ததில் அதில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அரசு அனுமதி இன்றி மணல் கடத்திச் சென்ற மாட்டு வண்டிகள் குறித்து தா.பழூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் 5 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்