மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 3 பேர் மீது வழக்குப்பதிவு

மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 3 பேர் மீது வழக்குப்பதிவு
X

பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டி.

காக்காபாளையம் ஓடையில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றிய 3 மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸார், அப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த 3 மாட்டு வண்டிகளை மறித்து சோதனை செய்ததில், அனுமதியின்றி அப்பகுதியில் உள்ள காக்காபாளையம் ஓடையில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வருவது தெரியவந்தது.

இதையடுத்து, 3 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த போலீஸார், வண்டிகளை ஓட்டி வந்த உடையார்பாளையத்தை சேர்ந்த ஜெயராமன்(56), செல்வகுமார்(49), சங்கர்(35) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!