தா.பழூரில் மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம்

தா.பழூரில் மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம்
X

த.பழுவூரில், மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம், மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. 

தா.பழூர் கிராமத்தில் மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் கிராமத்தில் மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம், அதன் மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாட்டுவண்டி மணல் குவாரியை உடனடியாக துவங்குவது. இது சம்பந்தமாக முன்கூட்டியே மாட்டுவண்டி தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

மேலும், மணல் அள்ளுவதற்கு டோக்கன் முறையா அல்லது ஆன்லைன் முறையா என்பதை விரைவாக தெரிவிக்க வேண்டும். மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். மணல் குவாரியில் மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு உபகரணங்களான டார்ச்லைட், மண்வெட்டி, இரவில் ஒளிரக்கூடிய ஸ்டிக்கர் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், உடையார்பாளையம் வட்டத்திற்குட்பட்ட, 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மாட்டுவண்டி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil