அரியலூர்: இடைய குறிச்சியில் ரூ. 48 லட்சத்தில் புறநோயாளிகள் பிரிவு

அரியலூர்: இடைய குறிச்சியில் ரூ. 48 லட்சத்தில் புறநோயாளிகள் பிரிவு
X

இடையக்குறிச்சி வடக்கு தெருவில் மழையால் சேதமடைந்த சாலையினை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ.கண்ணன் பார்வையிட்டார்.


அரியலூர் மாவட்டம் இடையக்குறிச்சியில் ரூ. 48 லட்சத்தில் புறநோயாளிகள்பிரிவு கட்டுமான பணியை எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்.

ஆண்டிமடம் ஒன்றியம்,இடையக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மருத்துவ துறையின் மூலமாக ரூபாய் 48 லட்சம் மதிப்பீட்டில் புறநோயாளிகள் பிரிவு புதிய கட்டிடம் கட்டும் பணியை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார்.

மேலும், இடையக்குறிச்சி வடக்கு தெருவில் மழையால் சேதமடைந்த சாலையினையும் எம்.எல்.ஏ.கண்ணன் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலர் அசோக சக்கரவார்த்தி, உதவி செயற்பொறியாளர் அன்பரசி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பெ.ராமலிங்கம், கிளை செயலாளர்கள் ராஜேந்திரன், சுந்தரமூர்த்தி, தகவல் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளர் ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ai marketing future