ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் கடைவீதியில் விதிமுறைகளை மீறிய 5 கடைக்களுக்கு அபராதம்

ஜெயங்கொண்டம்  அருகே தா.பழூர் கடைவீதியில் விதிமுறைகளை மீறிய 5 கடைக்களுக்கு அபராதம்
X

தா.பழூர் கடைவீதியில் விதிகளை மீறிய கடைகளுக்கு  அதிகாரிகள்  அபராதம் விதித்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் கடைவீதியில் கொரோனா ஊரடங்கால் காய்கறி, மளிகை,உணவகத்திற்கு சுகாதாரத்துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது.

தா.பழூர் பகுதியில் போலீசார் மற்றும் வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் இணைந்து கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விதிமுறைகளை மீறிய 4 கடைகளுக்கு தலா ரூ.200 வீதம் ரூ.800 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மளிகை கடை ஒன்றுக்கு 500 ரூபாய் என ரூ.1300 அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகளை பூட்டி 'சீல்' வைக்கப்படும் என்று கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த ஆய்வின்போது மண்டல துணை வட்டாட்சியர் கனகராஜ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திருமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் குமார், முத்து பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture