ஜெயங்கொண்டம்:ராணுவ வீரர் வீட்டில் தங்க நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை

ஜெயங்கொண்டம்:ராணுவ வீரர் வீட்டில்  தங்க நகை,  வெள்ளி பொருட்கள் கொள்ளை
X

ஜெயங்கொண்டத்தில் கொள்ளை நடந்த  ராணுவ வீரர் கபிலன் வீட்டில்  தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்தனர்.



ஜெயங்கொண்டத்தில் ராணுவ வீரர் வீட்டில் 10 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜோதிபுரத்தைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் கபிலன். இவரது மனைி தமிழ்செல்வி. தம்பதியர்கள் குடும்பத்துடன் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தமிழ்செல்வியின் தாய் வீடான தா.பழூருக்கு சென்றுவிட்டனர்.

வீட்டில் ஆள் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள், வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவை உடைத்து பீரோவில் இருந்த நகைகள், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மர்மநபர்கள் பிரிட்ஜில் இருந்த ஊறுகாயை எடுத்து மது அருந்தி விட்டு, சாவகாசமாக கொள்ளையடித்துவிட்டு பின் பக்க கதவு வழியாக சென்றுள்ளனர்.

கொள்ளை நடந்த வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தன

கதவு திறந்து கிடந்ததை பார்த்த பக்கத்து வீட்டினர், வீட்டு உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர். கபிலன் வீட்டிற்க்கு வந்து பார்த்தபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 10 பவுன் நகை, அரை கிலோ வெள்ளிப் பொருட்கள் திருட்டு போயிருந்தது.

கபிலன் கொடுத்த புகாரின் பேரில், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் டிக்ஸி மூலம் ஜெயங்கொண்டம் போலீசார் ஒரு வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
the future of ai in healthcare