வேளாண் உபகரணங்களை வழங்கினார் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ.கண்ணன்

வேளாண் உபகரணங்களை வழங்கினார் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ.கண்ணன்
X

ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்களை வழங்கினார்.

ரூ6.17லட்சம் மதிப்பீல் சுழற்கலப்பை, களை எடுக்கும் கருவி ஆகிய வேளாண் உபகரணங்களை விவசாயிகளுக்கு எம்.எல்.ஏ. கண்ணன் வழங்கினார்.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் ஒன்றியம்,பிச்சனூர் ஊராட்சி பூவாய்குளம் கிராமத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கூட்டுப்பண்ணையத் திட்டம் 2021-2022 கீழ் ரூபாய் 6.17 லட்சம் மதிப்பீட்டில் சுழற்கலப்பை, களை எடுக்கும் கருவி ஆகிய வேளாண் உபகரணங்களை உழவர் உற்பத்தியாளர் குழு விவசாயிகளுக்கு,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் வழங்கினார்.

இந்நிகழ்வில் ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தனசேகர், வேளாண்மை உதவி இயக்குனர் கீதா, வேளாண்மை அலுவலர் மகேந்திர வர்மன், உதவி வேளாண்மை அலுவலர் கவிதா, ஒன்றிய குழு துணைத் தலைவர் லதா பூ.ரெ.கண்ணன், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் கருணாகரன் மற்றும் கிளை கழக நிர்வாகிகள், பயனாளிகள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!