விவசாய பொருள்களை இரவில் எடுத்துவர விவசாயிகளுக்கு அனுமதி தரவேண்டும்

விவசாய பொருட்களை இரவில் எடுத்துவர விவசாயிகளுக்கு இரவு நேர ஊரடங்கில் சிறப்பு சலுகை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஆயிரகணக்கான விவசாயிகள் இரவு நேர ஊரடங்கால் தங்களது விளைபொருள்களை ஒழுங்குமுறை விற்பனைக்கு எடுத்துவர முடியாததால் விவசாயிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமமக்கள் தாங்கள் விளைவித்த எள், கடலை உள்ளிட்ட பொருள்களை ஜெயங்கொண்டம் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்று பணத்தை பெற்றுவந்தனர்.

இரவில் தங்களது விளைபொருள்களை வாகனங்களில் ஏற்றி வந்து விடியற்காலையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வரிசைப்படுத்விடுவதை விவசாயிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் தற்போது கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதனால் இரவு நேர வாகன கட்டுப்பாடு காரணமாக வாகனங்களை காலையில் விளைப் பொருள்களை ஏற்றிக்கொண்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு ஒரே நேரத்தில் வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. விளைபொருள்களை இறங்கி சந்தைப்படுத்தவும் விவசாயிகளால் முடியவில்லை.

இதனால் ஒருநாளில் முடிந்த வியாபாரம் இரண்டு மூன்று தினங்கள் இழுக்கின்றன. விவசாயிகள் பெரிதும் அவதிக்குள்ளவதோடு, இரவு நேரங்களில் தங்களது விளைப்பொருள்களை சமூக விரோதிகளிடம் இருந்து பாதுகாப்பதும் பெரிய சவாலாக உள்ளது.

மேலும் ஒரே நேரத்தில் சமூக இடைவெளியின்றி நூற்றுகணக்கான வாகனங்கள் வருவதால் கொரோனா அச்சமும் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு இரவு நேரக் கட்டுப்பாட்டில் விவசாயிகள் விளை பொருள்களை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு எடுத்து வருதற்கு தடைவிதிக்க கூடாது என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் விவசாய பொருட்களை வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்ல அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்