ஜெயங்கொண்டத்தை ஜெயம் கொண்டது யார்?
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 131669 ஆண் வாக்காளர்களும், 134596 பெண் வாக்காளர்களும் 3 இதர வாக்களர்கள் என மொத்தம் 266268 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 103915 ஆண் வாக்காளர்களும், 110099 பெண் வாக்காளர்களும் 2 இதர வாக்காளர்களும், என மொத்தம் 214016 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 80.38சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு, திமுக வேட்பாளர் கண்ணன், இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் சொர்ணலதா, அமமுக வேட்பாளர் ஜெ.கொ.சிவா, நாம்தமிழர் கட்சி வேட்பாளர் நீ.மகாலிங்கம், பகுஜன் சமாஜ் பர்டி வேட்பாளர் க.நீலமேகம், அண்ணா திராவிடர் கழகம் ஆ.நடராஜன் ஆகிய பிரதான கட்சி வேட்பாளர்கள் ஏழு பேருடன் ஆறு சுயேட்சைகளான வி.கே.கேசவராஜன், ரா.சதீஸ்குமார், அ.சாமுவேல் மார்டின், க.சுடர்விழி, ரா.சேதுராமன், சா.ராஜ்குமார் ஆகிய 13 வேட்பாளர்கள் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் களம் கண்டனர்.
கீழப்பழுர், அரசு தொழில்நுட்ப கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 377 மையங்களில் பதிவான வாக்குகள் 14 மேசைகளில் வைத்து 27 சுற்றுகளிலும் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கையின்போது ஒரு மேசைக்கு ஒரு நுண்பார்வையாளர், ஒரு கண்காணிப்பாளர், ஒரு வாக்கு எண்ணும் உதவியாளர் மற்றும் ஒரு அலுவலக உதவியாளர் ஆகியோர் கொண்ட குழு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..
இதில் ஜெயங்கொண்டம் தொகுதிக்கு 20 சதவீத இருப்புடன் தலா 17 கண்காணப்பாளர்கள், 17 உதவியாளர்கள் மற்றும் 17 அலுவலக உதவியாளர்கள் என மொத்தம் 102 அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
தபால் வாக்குகள் 4 மேசைகளில் எண்ணப்படுகின்றன. ஒரு மேசைக்கு கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், ஒரு கண்காணிப்பாளர், இரண்டு உதவியாளர்கள் ஆகியோர் கொண்ட குழு பணியில் உள்ளனர்.
இதில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு தலா 4 கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 4 கண்காணிப்பாளர்கள் 8 உதவியாளர்கள் என மொத்தம் 32 அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் உள்ளனர்.
இராணுவ பணியாளர்களுக்கான தபால் வாக்குகள் ஒரு மேசைக்கு கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர், 2 உதவியாளர்கள் கொண்ட குழு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதன்படி ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு 2 மேசையும் அமைக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் பணியை கண்காணிப்பதற்காக ஒரு மேசைக்கு ஒரு நுண்பார்வையாளர் வீதம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு 28 நுண்பார்வையாளர்களும் பணியில் உள்ளனர்.
வாக்கு எண்ணும் பணிகளில் உள்ள அனைத்து அலுவலர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் ஊடகத்தினர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்ற சான்று சமர்ப்பித்த நபர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேட்பாளர்களின் முகவர்களுக்கு முககவசம், பி.பி.இ கிட் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒவ்வொரு சுற்று முடியும் பொழுதும் முடிவுகளை தெரிவிப்பதற்காக எல்.இ.டி டிவி மற்றும் ஒலி பெருக்கி வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் நிகழ்வுகளை கண்காணிப்பதற்காக மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் 400 காவல்துறையினர், 72 மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தபால் வாக்குகள் வைக்கப்பட்டுள்ள காப்பறை காலை 7மணிக்கும், மின்னனு வாக்குப்பதிவு வைக்கப்பட்டுள்ள காப்பறை காலை 7.15மணிக்கும் தேர்தல் பார்வையாளர் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. இதனையடுத்து சரியாக எட்டுமணிக்கு மின்னனு வாக்குப்பதிவுகள் அனைத்தும் தலா 14மேஜைகளில் எண்ணப்படுகின்றன. தபால் வாக்குகள் ஜெயங்கொண்டம் சட்டமன்றத்திற்கு எட்டு மேஜைகளிலும் எண்ணப்படுகின்றன. தபால் வாக்குகள் ஒவ்வொரு மேஜையிலும் ஒரு சுற்றில் 300வாக்குகள் வீதம் எண்ணப்படுகின்றன.
இந்நிலையில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் பாமக மற்றும் திமுகவிற்கு இடையே கடும் போட்டி நிலவுவதாலும், மறைந்த வன்னியர் சங்கத்தலைவர் காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா இந்திய ஜனநாயக கட்சியில் தனித்து பாமவிற்கு எதிராக களம் காணுவதால் ஜெயங்கொண்டத்தை ஜெயம்கொண்டு எல்எல்ஏவாக யார் வெற்றி பெறப்போகிறார் என்பது இன்று தெரியும் என்பதால் பரபரப்பு நிலவுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu