இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம்
X

தா.பழூர் கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம் நடத்தப்பட்டது 

விவசாயிகள் விரோத சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். பொதுத்துறை தனியாருக்கு விற்பனைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசை கண்டித்து தா.பழூர் கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம் நடத்தப்பட்டது

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் அண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பத்மாவதி, மாவட்ட செயலாளர் உலகநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

விவசாயிகள் விரோத சட்டத்தை வாபஸ் வாங்க கேட்டு டெல்லி தலைநகர் 2020 -ஆம் ஆண்டு நவம்பர் 26 முதல் போராடி வரும் விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், அந்த சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், ரயில், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ராணுவ தொழிற்சாலைகள், விமான போக்குவரத்து, பொதுத்துறை ஆகியவற்றை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்தும். நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகள் உடைத்து சிதைத்து வரும் பிஜேபி அரசை கண்டித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!