ஆடிப்பெருக்கு புதுமண தம்பதிகளின் வேண்டுதலுக்காக குட்டித்தேர்கள்
அரியலூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, தச்சர்களால் தயார் செய்யப்பட்ட தேர்கள்.
அரியலூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, தச்சர்களால் தயார் செய்யப்பட்ட தேர்கள், பொதுமக்கள் ஆற்றில் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டதால், உற்பத்தி செய்யப்பட்ட தேர்கள் விற்பனையாகத கவலையில் தச்சர்கள் ஆழ்ந்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தை சுற்றியுள்ள பல கிராமங்களில் அதிக அளவில் தச்சர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பாரம்பரியமாக தச்சுத்தொழிலை மேற்கொள்ளும் தச்சர்கள். ஆடிப்பெருக்கிற்காக சிறிய தேர்களை வடிவமைப்பார்கள். புதுமணத்தம்பதிகள் தங்களது தாலிக்கொடியை மாற்றிக்கொள்ள ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு செல்லும்போது வழிப்பாட்டிற்காக கருகமணி, ஓலை, பேரிக்காய் உள்ளிட்ட பொருள்களுடன் தேரையும் வாங்கிச்சென்று படையல் இடுவார்கள். இவ்வாறு செய்தவன் மூலம் அடுத்தவருடத்திற்குள் தங்களுக்கு புத்திர பாக்கியம் ஏற்பட்டு தங்களது குழந்தைகள் இந்த தேரை ஓட்டி நடைப்பயில்வார்கள் என்பது ஜதீகம்.
இவ்வருடம் கொரோனா தொற்று பரவுதல் காரமணாக நீர்நிலைகளில் பொதுமக்கள் கூடுவதற்கு அரசு தடைவிதித்துள்ளது. தச்சர்கள் அதிக அளவு தேர் செய்திருக்கும் நிலையில் தற்போது அரசு விதித்துள்ள தடையால், நாளை ஒருநாளில் இந்த தேர்கள் விற்பனையாகுமா என்ற வேதனையில் தச்சர்கள் ஆழ்ந்துள்ளனர். கையில் உள்ள காசை வைத்து மரங்களை வாங்கி இழைத்து தேர்களை உருவாக்கியுள்ள நிலையில், தேர்கள் விற்பனையாகாமல் தேங்கிவிட்டால் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த இருமாதங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு ஆறுகளில் தண்ணீர் ஒடுவதால் ஆடிப்பெருக்கன்று பொதுமக்கள் வழிபாடு நடத்த தடையிருக்காது என்று எண்ணி, தேர்களை செய்துள்ளனர். தற்போது பொதுமக்கள் ஆற்றில் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டதால், என்ன செய்வது என்று அறியாமல் தச்சர்கள் திகைத்து போயுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu