மதுரை அருகே சோழவந்தான் பிரளயநாத சிவன் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

மதுரை அருகே சோழவந்தான் பிரளயநாத   சிவன் கோயிலில்  ஆருத்ரா தரிசனம்
X

பிரளயநாத சிவன் ஆலயத்தில், திருவாதிரை விழாவையொட்டி  சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 

Piralayanatha Sivan Temple Arudhra Darshan மதுரை அருகே சோழவந்தான் சிவன் ஆலயத்தில் திருவாதிரை விழாசிறப்பாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிவனை வழிபட்டனர்.

Piralayanatha Sivan Temple Arudhra Darshan

தமிழகமெங்கும் உள்ள சிவன் கோயில்களில் இன்று ஆருத்ரா தரிசனத்தையொட்டி நேற்று இரவு முழுவதும் ஜாம வரிசையில் பல்வேறு சிறப்புபூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவு முழுவதும் கோயிலிலேயே இருந்து இந்த நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர். விடியற்காலை வரை இப்பூஜைகள் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில், திருவாதிரை விழா நடைபெற்றது. இவ்விழாவை ஒட்டி, இக்கோயில் அமைந்துள்ள நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு அபிஷேக அர்ச்சனை வழிபாடுகள் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, திருவெம்பாவை பாராயணம், சிறப்பு பூஜைகள், பிரசாதம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில், கோவில் செயல் அலுவலர் இளமதி, தொழில் அதிபர் எம். வி. எம் .மணி, கவுன்சிலர்கள் டாக்டர் மருது பாண்டியன், எம். வள்ளி மயில், கணக்கர் சி பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசருக்கு பால், தயிர் ,மஞ்சள் பொடி போன்ற அபிஷேக திரவியங்களால், அபிஷேகம் நடைபெற்றது.

இதே போல, திருவேடகம் ஏடகநாதர் சுவாமி ஆலயத்திலும், தென்கரை மூலநாத சுவாமி ஆலயத்திலும், மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயத்திலும், வர சித்தி விநாயகர் ஆலயத்திலும், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், இம்மையில் நன்மை தருவார் திருக்கோவில், பழைய சொக்கநாதர் கோவில், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேசர் திருக்கோவில் ஆகிய கோவில்களில், நடராஜர் ,சிவகாமி, மாணிக்கவாசகர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதற்கான ஏற்பாடுகளை, விழா குழுவினர் மற்றும் ஆலய நிர்வாகிகள் கட்டளைதாரர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story