/* */

டாக்டர் கிருஷ்ணசாமியை கழட்டி விடும் பா.ஜ.க., என்ன காரணம்?

அதிமுகவில் இன்னும் கூட்டணி முடிவாகவில்லை. இப்படிப்பட்ட சூழலில், ஒரு பிரத்யேகமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

HIGHLIGHTS

டாக்டர் கிருஷ்ணசாமியை கழட்டி விடும் பா.ஜ.க., என்ன காரணம்?
X

புதிய தமிழகம் கட்சியின் அரசியல் நகர்வு, ஆர்வத்துடன் கவனிக்கப்பட்டு வருகிறது. புதிய தமிழகம் கட்சியின் 25 வருட ஆண்டு விழா மாநாடு, ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றதும் பெரிதும் கவனிக்கப்பட்டது.

செல்வாக்குமிக்க ஓட்டப்பிடாரம் தொகுதியில், தேவேந்திர குல வேளாளர் சமூகவாக்குகளும் மிக அதிகம். ஆனாலும், ஓட்டப்பிடாரத்தில் போதுமான வெற்றியை சுவைக்க முடியாததால், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதியை குறிவைக்கவே, இப்படி ஒரு மாநாட்டை டாக்டர் கிருஷ்ணசாமி முன்னெடுப்பதாகவும், தென்காசியில் தன்னுடைய மகனை வேட்பாளராக நிறுத்தலாம் என்றும் அப்போது சலசலக்கப்பட்டது.

ஒருபக்கம் திமுக அரசை கடுமையாக எதிர்த்து வந்தாலும், மற்றொரு பக்கம் அதிமுக, பாஜக கூட்டணியுடன் நெருங்கியே இருந்தார் புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி. திமுகவுக்கு எதிராக பாஜக தலைவர்கள் ஏதாவது கருத்து சொன்னால், உடனே பாஜகவுக்கு ஆதரவாக கிருஷ்ணசாமியும் கருத்துக்களை சொல்வது வழக்கம். அதனால் தான், எம்பி தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து, தென்காசி தொகுதியில் போட்டியிடுவார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், திடீரென அதிமுக, பாஜக கூட்டணி முறிவு அறிவிக்கப்பட்டது. எனவே, ஐஜேகே பாரிவேந்தர், ஜிகே வாசன், ஜான்பாண்டியன், போன்றோருடன் டாக்டர் கிருஷ்ணசாமியும் பாஜக தரப்பை சமாதானப்படுத்தும் முயற்சியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

அதுமட்டுமல்ல, அதிமுகவும், பாஜகவும் மறுபடியும் கூட்டணி சேரும் என்று நீண்ட நாட்களாகவே சொல்லி வந்தார் டாக்டர் கிருஷ்ணசாமி. ஆனால், இப்போது மொத்த கணக்கும் நொறுங்கி விட்டது.

புதிய தமிழகம் கட்சியின் மாநில செயற்குழுவை கடந்த 8-ந்தேதி கோவையில் நடத்தினார் டாக்டர் கிருஷ்ணசாமி. கூட்டணி தொடர்பான முடிவை எடுக்கும் அதிகாரம் டாக்டருக்கு வழங்கியது செயற்குழு. பாஜக கூட்டணியில் புதிய தமிழகம் இணையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜகவுக்கு எதிரான தாக்குதல்களை செயற்குழுவில் வெளிப்படுத்தியிருக்கிறார் கிருஷ்ணசாமி.

குறிப்பாக, தமிழகம் உள்பட பாஜக ஆளாத மாநிலங்களுக்கு நிதிகள் ஒதுக்குவதில் அக்கறைக்காட்டாதது, வெள்ள நிவாரணம் கேட்டு பலமுறை தமிழக அரசு வைத்த கோரிக்கையை கண்டுக்கொள்ளாதது என பிரதமர் மோடியை விமர்சித்தாராம் கிருஷ்ணசாமி.

பட்டியல் இனத்தில் இருந்து தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை நீக்க வேண்டும் என்கிற நம்முடைய நீண்ட கால கோரிக்கையை மோடியை நான் ஒருமுறை சந்தித்தபோது முன்வைத்தேன். மத்திய அரசுக்கு முறையாக கடிதமும் அனுப்பியிருக்கிறேன்.

ஆனால், இது குறித்து கொஞ்சம் கூட அக்கறைக் காட்டப்படவில்லை. நம் சமூகத்தை மோடி ஒரு பொருட்டாக பார்க்கவில்லை. நம்மை ஏமாற்றுகிறார். பாஜகவுடன் எந்த கான்செப்ட்டில் கூட்டணி சேர்வது? என்றெல்லாம் பேசினாராம் டாக்டர் கிருஷ்ணசாமி. இதனால், பாஜகவுடன் கூட்டணி இருக்காது என்கிற மனநிலைக்கு வந்துள்ளனர் புதிய தமிழகம் கட்சியினர்.

இது குறித்து அக்கட்சியினர் சிலரிடம் பேசியபோது, "பாஜகவுடன் கூட்டணி சேர்வதற்குத்தான் விருப்பமாக இருந்தார் டாக்டர். அதற்காக பாஜகவில் முக்கியஸ்தர்கள் சிலருடன் நட்பாக இருந்து வந்தார். அதனால், தமிழ்நாட்டிற்கு அண்மையில் மோடி வந்தபோது அவரை தனிப்பட்ட முறையில் சந்திக்க கிருஷ்ணசாமி விரும்பி தனது பாஜக முக்கியஸ்தர்கள் மூலம் காய்களை நகர்த்தினார். ஆனால், தனி சந்திப்புக்கு வாய்ப்பே இல்லை என மோடி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

வரிசையில் நின்று வரவேற்கலாம் என சொன்னபோது அதையும் டாக்டர் ஏற்கவில்லை. அதனால், அதிருப்தி அடைந்தார் டாக்டர். மேலும் கடைசி முயற்சியாக டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்திக்கவும் நேரம் கேட்டிருந்தார். அதுக்கும் நேரம் ஒதுக்கப்படவில்லை. இதனால் தான் பாஜக மீதும் மோடி மீதும் கோபமாக இருக்கிறார். அந்த கோபம் தான் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என முடிவு எடுக்கிறார்" என்கின்றனர்.

இந்த நிலையில், இந்த அதிருப்தியை கேட்டு அதிர்ந்த எடப்பாடி பழனிசாமி, "மணி"யான அந்த கொங்கு சீனியரை அழைத்து சில இன்ஸ்ட்ரக்ஷனை கொடுத்துள்ளார்.. அந்த மாஜியும், உடனே கிருஷ்ணசாமியிடம் போன் போட்டு பேசியுள்ளார்.

அப்போது, "திமுகவில் திருமாவளவனுக்கு எத்தனை சீட் கொடுக்கப்படுகிறதோ அத்தனை சீட் உங்களுக்கு நாங்கள் தருகிறோம், வாருங்கள் பேசுவோம்" என்று அழைத்திருக்கிறாராம்.

இனி டாக்டர் கிருஷ்ணசாமி என்ன முடிவெடுக்க போகிறார்? என்று தெரியவில்லை. ஆனால், தென் மாவட்டங்களில் காலூன்ற முடிவு கட்டியிருக்கும் தமிழக பாஜக, டாக்டரை நழுவ விடுகிறதோ?? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Updated On: 13 Feb 2024 4:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலுடன் இந்த உணவு பொருட்களை சாப்பிடாதீங்க!
  2. லைஃப்ஸ்டைல்
    ருசியான கோதுமை முறுக்கு செய்வது எப்படி?
  3. வீடியோ
    இந்த படம் கிடைச்சது ரொம்ப சந்தோஷம் Vidharth !! || #anjaamai #Vidharth...
  4. லைஃப்ஸ்டைல்
    சருமம் மற்றும் கூந்தல் இரண்டையும் பளபளப்பாக மாற்ற என்ன செய்யணும்...
  5. வீடியோ
    Vani Bhojan -யை Rambha என கிண்டல் !! #anjaamai #anjaamaimovie...
  6. ஈரோடு
    ஈரோடு அரசு மருத்துவமனையில் தொடரும் வீல்சேர் பிரச்னை:...
  7. இந்தியா
    என்டிஏ அமோக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும்! பல...
  8. லைஃப்ஸ்டைல்
    வெள்ளை முள்ளங்கியில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. வீடியோ
    NEET தேர்வு அவசியமா ? Vani Bhojan பரபரப்பு பதில் ! |#neet #vanibhojan...
  10. சினிமா
    நீங்களும் நடிகர் மாதவனைப் போல ஜொலிக்க வேண்டுமா? இத ஃபாலோ பண்ணுங்க..!