கோவையில் நடந்த பிரஸ்மீட்: தேர்தல் அதிகாரி எச்சரிக்கை..!
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை (கோப்பு படம்)
கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் கோவை மக்களவை தொகுதியின் கருத்துகணிப்பு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற இருந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பத்திரிகையாளர் மன்றத்தை விட்டு வெளியே வந்து சாலையோரத்தில் நின்று IDPS நிறுவனத்தின் தலைவர் திருநாவுக்கரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கோவை மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சிங்கை இராமச்சந்திரன், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், பாஜக வேட்பாளர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் IDPS என்ற அமைப்பு தமிழகம் முழுவதும் கருத்துக்கணிப்பு எடுத்து வருகின்றது. அதனைத் தொடர்ந்து கோவை மக்களவைத் தொகுதியில் கருத்து கணிப்பு எடுத்த போது பாஜக வேட்பாளர் அண்ணாமலை 38.9% வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என்றும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 33.4 சதவீதமும், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 18.5 சதவீதமும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி 6.8% மற்றும் இதர கட்சிகள் 2.4 சதவீதம் வாக்குகள் பெறும் என்று IDPS குழுவின் தலைவர் திருநாவுக்கரசு தெரிவித்தார் .
மேலும் கோவை மக்களவைத் தொகுதியில் மக்களிடம் கருத்துக் கணிப்பு கேட்ட போது திமுகவினரும், அதிமுகவினரும் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஓட்டு போடுவார்கள் என்றும் திராவிட கட்சிகள் வேண்டாம் அண்ணாமலைக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப் போவதாக இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை தெரிவித்ததாக கூறினார்.
மேலும் தேர்தல் விதிமுறை மீறி சாலை ஓரத்தில் செய்தியாளர்களிடம் கருத்துகணிப்பு வெளியிட்டதால் தேர்தல் பார்வை அதிகாரி மூர்ச் தாரா, கருத்து கணிப்புகளை வெளியிட்டவர்கள் மீது தேர்தல் விதிமீறல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu