எம்.ஜி.ஆர்- என்.டி.ஆர் நட்பால் என்ன நடந்தது?
கிருஷ்ணாநதி நீர் திட்டப்பணிகளை ஆய்வு செய்ய சென்ற அப்போதைய முதல்வர்கள் எம்.ஜி.ஆர்.,- என்.டி.ஆர்.,
சுப்ரீம் கோர்ட் விசாரணை முடிந்து தீர்ப்பு வந்து விட்டது. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையமும் அமைக்கப்பட்டு விட்டது. அதன் தீர்ப்பும் வெளியாகி விட்டது. மத்திய நீர் வள ஆணையமும் தலையிட்டு பேசிப்பார்த்தும் பலனில்லை. தண்ணீர் திறப்பதில்லை என்ற முடிவில், கர்நாடகா விடாப்பிடியாக இருக்கிறது.
காவிரி நதிநீர் பிரச்னை இவ்வளவு சிக்கலாக காரணம் கர்நாடகத்தின் அரசியல்வாதிகள் மட்டுமே. நதிநீரில் அரசியல் செய்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் முன்பு அரசியல்வாதிகள் எப்படி நடந்து கொண்டனர் என்று ஒரு சிறு சான்றினை காணலாம்.
நாடக உலகில் இருந்து சினிமா உலகிற்கும் பின்பு அரசியல் உலகில் புகுந்து முதன் முதலில் தமிழக முதலமைச்சர் ஆனவர் எம்ஜிஆர். அவரை ஆசானாக மதித்து அவர் வழியிலே பயணம் வந்து ஆந்திராவில் அடுத்து முதல்வர் ஆனவர் என்டிஆர்.
இவர்கள் இருவரின் நட்பினால் நாட்டுக்கு என்ன பயன்? மஹாராஷ்டிராவில் உருவாகி ஆந்திரா வழியாக கடலில் வீணாக கலக்கும் கிருஷ்ணா நதிநீரை கண்டு பிடித்து அதை சென்னைக்கு கொண்டு வர திட்டம் தீட்டி செலவு செய்தும் கொண்டு வந்து சென்னையின் குடிநீர் பஞ்சத்தை போக்கி விட்டனர். அப்படிப்பட்ட இரண்டு ஜாம்வான்களும் ஆந்திராவில் அதற்கான ஆய்வை காணச் சென்ற போது எடுத்த புகைப்படம் தான் மேலே பகிரப்பட்டுள்ளது.
அதற்கு முன் சென்னையில் குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் கடுமையாக கஷ்டப்பட்டனர். அதனை மாற்றி அமைத்து மக்கள் தாகத்தை தீர்த்தார் எம்ஜிஆர். அதற்கு உதவியாக இருந்தார் என்.டி.ஆர்.,. இதேபோல் பல அரசியல்வாதிகளை முன் உதாரணமாக காட்ட முடியும். ஆனால் தற்போது தான் சூழல் முற்றிலும் மாறிப்போனது.
இந்த கிருஷ்ணாநதி குடிநீர் திட்டம் இன்று வரை மிகவும் சிறப்பாக செயல்படுகிறது.
நதியை போலே நாமும்
நடந்து பயன் தர வேண்டும்?
கடலை போலே விரிந்த
இதயம் இருந்திட வேண்டும்?
வானம் போலே பிறருக்காக
அழுதிட வேண்டும்? நாம் வாழும் வாழ்க்கை உலகெங்கும் விளங்கிட வேண்டும்? இந்த பாடல் வரிகளும் எம்ஜிஆருக்காக எழுதப்பட்ட வரிகள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu