முழு ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாது : முதல்வர் மு.க.ஸ்டாலின்
முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது - அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
பெருகி வரும் கொரோனா பெருந்தொற்றிலிருந்து, முழு வீச்சில் - போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து - நம் மக்களைப் பாதுகாத்திட வேண்டும் என்பதில் எனது தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறைந்த அளவு பாதிப்புடன், இறப்புகளை பெருமளவில் தவிர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த தளர்வுகளைப் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு சிலர் ஊரடங்கு விதிகளை மீறுகின்றனர். எனவே இந்தத் தளர்வுகள் தொடர்ந்து நீட்டிக்கப்படலாமா அல்லது அதில் மாற்றங்கள் செய்யலாமா என்பது குறித்த உங்களது மேலான கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இன்று நடைபெற்றஅனைத்துக்கட்சி கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1.கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சிகளும் முழு ஒத்துழைப்பு நல்குவது.
2.தொற்று பரவல் காலகட்டத்தில் பொதுக்கூட்டங்கள், அரசியல் நிகழ்வுகளை அனைத்துகட்சிகளும் முற்றிலுமாக நிறுத்துவது.
3.அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற மக்களை அனைத்து கட்சிகளும் அறிவுறுத்துதல்.
4.தொற்று பரவலை கட்டுப்படுத்த ஆலோசனைகளை வழங்க, சட்டமன்ற கட்சிகளை சார்ந்த உறுப்பினர்களை கொண்ட ஆலோசனைக்குழு அமைக்கலாம்.
5. தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்துவது.
என 5 தீ்ர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து சென்னை போலீஸ் கட்டுப்பாடுகளை தீவிரமாக்கி வருகின்றனர். வாகனங்களில் வெளியில் சுற்றுவோர் கொஞ்சம் அதிகப்படியாக விசாரிக்கப்பட்டு, எச்சரிக்கப்படுகின்றனர்.முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆலோசனை கூட்டத்தை அடுத்து கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu