ஆடம்பரம் இல்லாமல் பதவியேற்பு: ஸ்டாலின் அறிவிப்பு

ஆடம்பரம் இல்லாமல் பதவியேற்பு: ஸ்டாலின் அறிவிப்பு
X

மு.க.ஸ்டாலின் 

ஆடம்பரம் இல்லாமல் எளிய முறையில் பதவி ஏற்பு நடைபெறும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை மெரினாவில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் சென்று தான் வெற்றி பெற்ற சான்றிதழை வைத்து தந்தையை வணங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், 'தமிழக மக்கள் வழங்கியுள்ள வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது.திமுக அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றும். இன்று எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் அப்போது பதவியேற்பு நாள் ஆலோசித்து பிறகு அறிவிக்கப்படும். மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப திமுக ஆட்சி அமையும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற படிப்படியாக பணியாற்றுவோம். கொரோனா கால கட்டம் என்பதால் எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் எளிய முறையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும். வெற்றிக்கு வழிவகுத்து தந்த அனைவருக்கும் நன்றி. தமிழகம பாதளத்திற்கு சென்றுள்ளது. தமிழகத்தை எல்லா நிலைகளிலும் உயர்த்துவோம்.எங்கள் ஆட்சி மக்களுக்காக இருக்கும் என்றார்.

Tags

Next Story
ai marketing future