ஈரோட்டில் விபசாரம்: மசாஜ் சென்டர் உரிமையாளர் பெண் உட்பட 2 பேர் கைது

ஈரோட்டில் விபசாரம்: மசாஜ் சென்டர் உரிமையாளர் பெண் உட்பட 2 பேர் கைது
X

விபச்சாரம் நடத்தியதாக கைது செய்யப்பட்டவர்கள்.

ஈரோட்டில் மசாஜ் சென்டரில் விபசாரம் நடத்தியதாக, உரிமையாளர் பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மசாஜ் சென்டரில் விபசாரம் நடத்தியதாக, உரிமையாளர் பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோட்டில் மசாஜ் சென்டர், ஸ்பா என்ற பெயர்களில் பல்வேறு இடங்களில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடந்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகருக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், ஈரோடு பெருந்துறை சாலையில் செங்கோடம்பள்ளம் பகுதியில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து விபசாரம் செய்வதாக, ஈரோடு தாலுகா போலீசாருக்கு நேற்று (புதன்கிழமை) தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அந்த மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து விபசாரம் செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி, மசாஜ் சென்டர் உரிமையாளரான பெருந்துறை அருகே உள்ள சுள்ளிபாளையத்தை சேர்ந்த கமலேஷ் என்பவருடைய மனைவி ஈஸ்வரி (வயது 40), மேலாளரான திண்டல் செங்கோடம்பள்ளம் பகுதியை சேர்ந்த சவுகத் அலி (வயது 30) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அந்த மசாஜ் சென்டரில் இருந்து 30 வயது முதல் 35 வயதுடைய 5 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

இதே போல் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் செய்பவர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture