கோடநாடு கொலை வழக்கு விசாரணை: இருவரிடம் விசாரணை

கோடநாடு கொலை வழக்கு விசாரணை: இருவரிடம் விசாரணை
X
கோப்பு படம் 
கோடநாடு கொலை வழக்கு விசாரணையில், இருவரிடம் விசாரணை நடைபெற்றது.

கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து, கடந்த அக்டோபர் 1ம் தேதி வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றம் காவல்துறைக்கு கூடுதல் விசாரணையை மேற்கொள்ள அனுமதி அளித்ததை அடுத்து, இவ்வழக்கை அக்டோபர் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, உதகையில் உள்ள பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஐந்து தனிப்படை கொண்ட குழு, குற்றம் சாட்டப்பட்டவர்களாக கூறப்படும் நபர்கள் மற்றும் சாட்சிகளிடம் கூடுதல் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், காவல்துறை மூலம் கூடுதல் விசாரணையானது நடைபெற்று வரும் நிலையில், இச்சம்பவம் நடந்த போது, கோடநாடு எஸ்டேட் வழக்கு பதியப்பட்ட காவல் நிலையத்தில் பணி செய்த சப் இன்ஸ்பெக்டர் ராஜனிடம் உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், தினேஷ் குமார் தற்கொலை வழக்கில் தினேஷ் குமாரின் சகோதரி ராதிகா ஆகியோரிடம் அவரது கிராமத்திலும் விசாரணை நடத்தி உள்ளனர்.

இவ்வழக்கில், காவல்துறை விசாரணை வளையத்தில் அடுத்தடுத்து யார் யார் உள்ளனர் என்பது, இதுவரை கேள்வி குறியாகவே உள்ளது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி