கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்க நேரிடும் : தமிழக அரசு எச்சரிக்கை

கொரோனா  விதிமுறைகளை  முறையாக பின்பற்றவில்லை என்றால் இரவு நேர   ஊரடங்கு பிறப்பிக்க நேரிடும் : தமிழக அரசு எச்சரிக்கை
X
கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்க நேரிடும் என்று தமிழக அரசு எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

கொரோனா முறையாக பின்பற்றவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்க நேரிடும் : தமிழக அரசு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் இன்று கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக்குப் பின்னர் தமிழக அரசு அவசர அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டது.

அதன்படி பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். ஆகவே, அரசு கூறியபடி கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும். முக கவசம் அணிவது கட்டாயம், இவைகளை செய்யவில்லை என்றால் கொரோனா பற்களை கட்டுப்படுத்த முடியாது. தவிர்க்க முடியாத நிலையில் இரவு நேர ஊரடங்கை பிறப்பிக்க நேரிடும். அதனால், மக்கள் சிரமத்துக்கு உள்ளாக நேரிடும். அதை தவிர்ப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!