கொரோனா பணியில் உயிரிழந்த மருத்துவர் குடும்பங்களுக்கு நிவாரணம் :முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

கொரோனா பணியில்  உயிரிழந்த  மருத்துவர் குடும்பங்களுக்கு நிவாரணம் :முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
X

முதல்வர் மு.க.ஸ்டாலின் 

கொரோனா பணியின்போது உயிரிழந்த மருத்துவர் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

கொரோனா பெருந்தொற்று மருத்துவ பணியில் ஈடுபட்டு உயிரிழந்த 43 மருத்துவர் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.

கொரோனா காலத்தில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது மருத்துவ சேவை செய்த மருத்துவர்கள் 43 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களது குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் தலா ரூ.25லட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதேபோல 2வது அலையில் சேவையாற்றும் மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.30ஆயிரமும், செவிலியர்களுக்கு ரூ.20ஆயிரமும், பிற மருத்துவ பணியாளர்களுக்கு ரூ.15ஆயிரமும் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!